search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாஸ்பேட்டை போலீசார் விசாரணை"

    லாஸ்பேட்டையில் கல்லூரி மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பை சேர்ந்தவர் ஆனந்து, இவரது மனைவி பொன்னி. இவர்களது மகள் ஆனந்தி (வயது19). பெற்றோர் இறந்து விட்டதால் ஆனந்தி பொதுப்பணித்துறையில் உதவியாளராக பணிபுரிந்து வரும் தனது அத்தை கோவிந்தம்மாள் பராமரிப்பில் இருந்து வந்தார். தமிழ்வழி கல்வியில் பிளஸ்-2 முடித்து ஆனந்தி லாஸ்பேட்டை சமுதாய கல்லூரியில் பயோகெமிஸ்டரி முதல் ஆண்டு படித்து வந்தார்.

    பாடப்பிரிவுகள் ஆங்கில வழி கல்விமுறையில் இருந்ததால் ஆனந்தி படிக்க சிரமப்பட்டு வந்தார். இதனை தனது அத்தை கோவிந்தம்மாளிடம் அவ்வப்போது கூறி வருத்தப்பட்டு வந்தார். அப்போதேல்லாம் போக போக சரியாகி விடும் என்று ஆனந்திக்கு கோவிந்தம்மாள் ஆறுதல் கூறி வந்தார். ஆனால் தேர்வில் தோல்வி அடைந்து விடுவுமோ என்று ஆனந்தி சோகத்தில் இருந்து வந்தார்.

    இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த ஆனந்தி வீட்டில் வி‌ஷத்தை குடித்து விட்டார். பணி முடிந்து வீடு திரும்பிய கோவிந்தம்மாள் மயங்கி கிடந்த ஆனந்தியிடம் விசாரித்த போது வி‌ஷத்தை குடித்து விட்டதாக தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கோவிந்தம்மாள் உடனடியாக ஆனந்தியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே ஆனந்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை புறக்காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    லாஸ்பேட்டையில் கார் டிரைவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை சுப்பிரமணிய சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 37). கார் டிரைவர். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 3 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. தற்போது விஜயலட்சுமி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இதற்கிடையே பொன் ராஜ் தலையில் நரம்பு கோளாறு காரணமாக வலியால் அவதிப்பட்டு வந்தார். ஆஸ்பத்திரியில் காண்பித்தும் நோய் குணமாகவில்லை. அவ்வப்போது தலைவலியால் பொன்ராஜ் அவதிக்குள்ளாகி வந்தார்.

    சம்பவத்தன்றும் அவருக்கு தலைவலி அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பொன்ராஜ் வீட்டில் இருந்த பூச்சு கொல்லி மருந்தை (வி‌ஷம்) குடித்து விட்டார்.

    இதில், மயங்கி விழுந்த பொன்ராஜை அவரது மனைவி விஜயலட்சுமி மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு பொன்ராஜ் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் ஏட்டு ராமச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×